தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழலுக்கு பிறந்த கட்சி திமுக - அமைச்சர் கருப்பணன் விமர்சனம்! - அமைச்சர் கருப்பணன் குற்றச்சாட்டு

ஈரோடு: ஊழக்கு என்றே பிறந்த கட்சி திமுக என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு
அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு

By

Published : Dec 25, 2019, 7:18 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் திறந்த வேன் மூலமாகவும், வீதி வீதியாக சென்றும் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’இந்த தேர்தல் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உண்மையான நேரடி போட்டி. தமிழ்நாட்டில் தனியார்வசமிருந்த கேபிள் ஒளிப்பரப்பு உரிமையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசுடைமையாக்கினார். திமுக தங்களது ஆட்சிக்காலத்தில் மக்களை ஏமாளிகளாக்கி அவர்களது குடும்பத்தினர் பணக்காரர்களாக ஆவதற்கு துணைபோனார்கள். ஊழல் செய்வதற்கு என்றே பிறந்த கட்சி திமுக. ஸ்டாலின் பொய் பேசுவதற்கே பிறந்தவ’ என்றார்.

இதையும் படிங்க...நாடு சந்திக்கும் சுகாதாரத் துறை பிரச்னைகள்.!

ABOUT THE AUTHOR

...view details