தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழல் குறித்து பேச திமுகவிற்கு தகுதியில்லை - பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துவரும் திமுகவிற்கு ஊழல் குறித்து பேசுவதற்கு தகுதியில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

DMK not qualified to talk about corruption says BJP Annamalai
ஊழல் குறித்துப் பேச திமுகவிற்கு தகுதியில்லை- பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு

By

Published : Feb 20, 2021, 8:29 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன் பாளையத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஆகியோர் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

இதற்கு முன்னதாக பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான 7 பேரையும் மன்னிப்பதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பான கேள்விக்கு, ராஜிவ் காந்தி வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில், தெளிவாக கூறியுள்ளது எனவும் அந்த வழக்கில் சிறையிலுள்ள 4 பேர் வேறுநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய அரசு சிந்தித்து தான் முடிவு எடுக்கும் எனவும் அவர் பதிலளித்தார்.

மேலும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியிருப்புகள், அவசர ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மோடி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்கள் குறித்து புகார் அளித்து வரும் திமுகவுக்கு ஊழல் குறித்து பேசுவதற்கு எவ்வித தகுதியும் இல்லை என்றும் 2ஜி வழக்கில், விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் சட்டப்பேரவை தேர்தலோடு, மூன்று மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வரவுள்ளதாக தெரிவித்த அவர், தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவுடன் எவ்வித பிரச்னையும் இல்லை என்றார்.

இதையும் படிங்க:பெண்களை இழிவாகப் பேசும் ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details