ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பிரதமர் கிராம புறப் சாலைகள் திட்டத்தில் ரூ.349 லட்சத்தில் சாலை பணியை துவக்கி வைத்தார். மேலும், குன்றி மலைப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து அங்கு நடபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "குன்றி மலைப்பகுதியில் 75 ஆண்டுகளாக தொலை தொடர்பு வசதியில்லாமல் இருந்த நிலையில் தற்போது செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் சமூக மக்களுக்கு பிற இடங்களில் எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
'தமிழக அரசை கண்டாலே மத்திய அரசுக்கு கசப்பு' - எம்பி ஆ.ராசா விளாசல்! இங்குள்ள மாணவர்களுக்கு பிசி சான்றிதழ் வழங்குவதால் அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. எஸ்டி சான்றிதழ் பெற மத்திய அரசின் பழங்குடியினர் ஆணையத்தை அணுக வேண்டும். ஆனால் தமிழக அரசிமிடருந்து வரும் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்பதில்லை.
தமிழக அரசை கண்டாலே மத்திய அரசுக்கு எட்டி கசப்பாக இருக்கிறது. நீண்ட நாள்களாக சாலை வசதியில்லாத மல்லியம்துர்க்கம், ஏலஞ்சி, மாக்கம்பாளையம் ஆகிய கிராமங்களில் ரூ.8 லட்சம் செல்வில் சாலை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடம்பூர், தாளவாடி பகுதியில் மலையாள சமூக மக்களுக்கு எஸ்டி(ST) சான்றிதழ் வழங்குதல் அதிமுக ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவின் 'கண்டா வரச்சொல்லுங்க' போஸ்டர்.. எம்.பி ஜோதிமணியின் ஸ்மார்ட் பதில்!