Erode East Bypoll: தேர்தல் பணி குறித்து திமுக அமைச்சர்கள் ஆலோசனை தீவிரம் ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி(Erode East Bypoll) காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட தேர்தல் பணி குறித்த கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (ஜன.29) நடைபெற்றது. ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள அக்கட்சியின் தேர்தல் பணிமனையில், தேர்தல் ஆலோசனையில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில் திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, திக எனப் பல்வேறு கட்சிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, 'திமுகவைப் பொறுத்தவரை பொதுக்கூட்டம் அதிகமின்றி மக்களை நேரடியாக சந்திப்பது தான் திமுகவின் தேர்தல் வியூகம். ஈரோடு அருகே வரும் பிப்.1ஆம் தேதி திமுக கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், வரும் 3ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்’ எனத் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பது மற்றும் வாக்குச் சாவடிகளில் கூட்டணி கட்சியின் சார்பில் தேர்தல் மையங்களில் முகவர்களை நியமிப்பது உள்ளிட்டவைகள் குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கானப் பணிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இதையும் படிங்க: ’உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதே பெருமை’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்