தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதியை விட திறமையானவர்கள் திமுகவில் உண்டு: காடேஸ்வரா சுப்பிரமணியம் - Hindu Front leader Kadeswara Subramaniam

திமுகவில் உதயநிதியை விட திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர்; அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

உதயநிதியை விட திறமையானவர்கள் திமுகவில் உண்டு: காடேஸ்வரா சுப்பிரமணியம்
உதயநிதியை விட திறமையானவர்கள் திமுகவில் உண்டு: காடேஸ்வரா சுப்பிரமணியம்

By

Published : Dec 14, 2022, 8:49 PM IST

உதயநிதியை விட திறமையானவர்கள் திமுகவில் உண்டு: காடேஸ்வரா சுப்பிரமணியம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்து முன்னணியின் ஈரோடு மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி அளித்தார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றது குறித்த கேள்விக்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அளித்த பதில், 'திமுக ஒரு குடும்ப ஆட்சி என்று தான் கூற வேண்டும். திமுகவிற்காக உழைத்த எத்தனையோ மூத்த அரசியல்வாதிகள் உள்ளனர். கட்சிக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர்.

கருணாநிதி, அவருக்கு அடுத்து ஸ்டாலின். அடுத்து அவரது மகன் உதயநிதி அமைச்சராக உள்ளார். ஆனால் திறமையானவர்கள் அக்கட்சியில் உள்ளனர். ஆகையால் திமுகவில் திறமை வாய்ந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க:வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்ஸை சந்திப்பேன் - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details