தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, கரோனா குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மகேந்திரன் பழனிசாமி, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தவறான செய்தியைப் பரப்பியுள்ளார்.