ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரத்தை ஆதரித்து, மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா பரப்புரை செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜெயலலிதா உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் பரப்புரையில் திமுக கூறினால், அதற்கு அஞ்சி அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கின்றனர். கடந்த திமுக ஆட்சியின்போது, இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படவில்லை என்பது பொய் குற்றச்சாட்டு. நிலங்கள் கொடுக்கப்பட்டன.
இலவச சமையல் எரிவாயு மீதான விமர்சனம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர்களிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண்போம். இலவச சிலிண்டர் கொடுக்கிறோம், மாதம் ரூபாய் 1500 உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஏன் ஆட்சியில் இருக்கும்போது கொடுக்கவில்லை.
பாஜகவுடன், திமுக கூட்டணி வைத்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டுகிறார். கூட்டணியில் இருக்கும்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கும், பொது சிவில் சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அதிமுகவினர் ஆதரவு தெரிவித்தனர்.
மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் இருகட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என தெரிவித்தார். ஆனால் அம்மா ஆட்சி எனக் கூறிக்கொண்டு இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்’. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளவில்லை” என்றார்.
இதையும் படிங்க:நடந்து சென்றா பதவி பெற்றீர்களா? எடப்பாடிக்கு அழகிரி கேள்வி