ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் அதிமுக, சிபிஐ, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, நாம் தமிழர் கட்சி, இரண்டு சுயேச்சைகள் என எட்டு பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் தேமுதிக வேட்பாளர் ரமேஷூக்கு மாற்றாக பாலமுருகன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு உறுதிமொழி ஏற்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் கூறினார்.
உறுதிமொழி படிப்பதற்கு திணறிய தேமுதிக மாற்றுவேட்பாளர்! அப்போது, தேர்தல் உறுதிமொழியை வாசிக்க திக்கு திணறி தடுமாறினார். சரிவர படிக்க முடியாமல் எழுத்துக்கூட்டி படித்தார். இதைப் பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணு தெரியவில்லையென்றால் கண்ணாடி போட்டு மீண்டும் படியுங்கள் என்றார். படித்துவிட்டேன் என நைசாக நழுவினார் மாற்று வேட்பாளர் பாலமுருகன். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க...இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்