தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி ஷாப்பிங்: கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு - தீபாவளி ஷாப்பிங்

ஈரோடு: கடைவீதிப் பகுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தீபாவளி பண்டிகைக்கான பொருள்களை வாங்கிவருகின்றனர்.

purchase
purchase

By

Published : Nov 13, 2020, 5:18 PM IST

இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையின்ள் கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஈரோடு கடைவீதிப் பகுதியில் ஜவுளிப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் கடைசிக்கட்ட விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது.

கடைவீதியின் நான்கு பகுதிகளிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே சமயத்தில் ஜவுளிப் பொருள்கள், காலணி வகைகள், ரோல்ட் கோல்ட் அணிகலன்கள் உள்ளிட்ட கடைகளில் கூடி தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிவருகின்றனர்.

கடைவீதிப் பகுதியில் அனைத்து வகை போக்குவரத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பன்னீர்செல்வம் பூங்கா தொடங்கி மணிக்கூண்டு வரை சாலைகளில் மக்கள் நெருக்கடியடித்தபடி கடைகளைத் தேடி தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிவருகின்றனர்.

தீபாவளி ஷாப்பிங்

கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் சீருடை அணிந்த காவலர்களும், சீருடை அணியாத காவல் துறையினரும் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடைசி 2 நாள்களாக கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தை உள்ளிட்ட கடைவீதிப் பகுதிகளில் ஜவுளி ரகங்களின் விற்பனை அமோகமாக இருந்தததாகவும், கரோனா பாதிப்பால் கடந்த 8 மாத கால பாதிப்பை தீபாவளிப் பண்டிகை வந்துதான் காப்பாற்றியிருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுவரை மழையில்லாமல் கடைசி நாளில் விட்டு விட்டு மழை பெய்த போதும் மக்கள் காத்திருந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

கடைவீதியின் நான்கு பகுதியிலும் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மாநகரப் பகுதிகளில் பேருந்துகள் கடக்க முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரம் முழுவதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details