தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் ஆய்வில் சிக்கிய தரமற்ற முட்டைகள்: முட்டைகளை திரும்ப பெற நிறுவனங்களுக்கு ஆட்சியர் உத்தரவு! - inspection at Anganwadi Centre

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சத்துணவு, அங்கன்வாடி மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் தரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு உணவு பாதுகாப்பு துறையினர் முட்டையின் தரத்தை சோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

ஈரோட்டில் ஆட்சியர் ஆய்வில் சிக்கிய தரமற்ற முட்டைகள்
ஈரோட்டில் ஆட்சியர் ஆய்வில் சிக்கிய தரமற்ற முட்டைகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 2:45 PM IST

ஈரோட்டில் ஆட்சியர் ஆய்வில் சிக்கிய தரமற்ற முட்டைகள்

ஈரோடு: நாள்தோறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக அதேப் பகுதியில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.4) கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரபாளையத்தில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவர்களுக்கு வழங்குவதற்காக வேகவைத்த முட்டையை உடைத்து பாரத்த போது முட்டை கருமை நிறத்தில் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாணவர்களுக்கு அந்த முட்டையை வழங்கக்கூடாது என அனைத்து முட்டையும் பறிமுதல் செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நான்கு நகராட்சி மற்றும் 14ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை முட்டைகள் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் முட்டைகள் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (நவ.4) கொடுமுடி வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, தாமரபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வேக வைக்கப்பட்ட முட்டைகளில் கருமை நிறம் தென்பட்டது. இதையடுத்து முட்டைகள் மாணவர்களுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பின்னர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 312 மையங்களில் வழங்கப்படும் முட்டைகள் குறித்து சோதனை செய்ததில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஊராட்சிக்கு உட்பட்ட சில பள்ளிகளில் மட்டும் குறைபாடுகள் காணப்பட்டன. இதைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து முட்டைகள் மையத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட முட்டைகள் அனைத்தும் திரும்ப பெற வலியுறுத்தப்பட்டு நிலையில், முன்னதாக விநியோகம் செய்த முட்டைகளை பறிமுதல் செய்து புதிதாக முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட முட்டைகள் அனைத்தும், உணவு பாதுகாப்பு துறையினர் மூலம் முட்டை மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப் பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அவை அனைத்தும் தர சோதனை முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளிகளில் தரமான முட்டைகளை விநியோகம் செய்ய ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க:அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கின?

ABOUT THE AUTHOR

...view details