தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் வருகையையொட்டி விலையில்லா ஆடுகள் வழங்கல்! - Distribution of priceless goats

ஈரோடு: விலையில்லா ஆடுகள் வழங்கும் விழாவில் 200 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படாததால், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கால்நடைத்துறையினர் அவசர அவசரமாக ஆடுகளை வழங்கினர்.

விலையில்லா ஆடுகள் வழங்கல்
விலையில்லா ஆடுகள் வழங்கல்

By

Published : Jan 6, 2021, 11:21 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ஏளூரில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 250 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், 50 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது வரை 200 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படவில்லை எனப் பயனாளிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (ஜன.06) முதலமைச்சர் வருகையையொட்டி, 200 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தலா 4 வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. மேலும் ஆடுகள் கிடைக்காத பயனாளிகள் சொந்தமாக ஆடுகளை வாங்கினால் அவர்களுக்கு அதற்குரிய ரூ.10 ஆயிரம் வழங்குவதாக கால்நடை அறிவுறுத்தியது.

இதையடுத்து சத்தியமங்கலம் பகுதியில் ஆடுகளை வாங்கிய பயனாளிகள் ஆடுகளுடன் வந்து கால்நடை மருத்துவர் குழுவின் முன் காண்பித்ததையடுத்து, அவர்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

அதன் பின்னர் அவர்கள் ஆடுகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊர் திரும்பினர். விலையில்லா ஆடுகள் வழங்கும் விழாவில் 200 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படாததால், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அவசர அவசரமாக ஆடுகளை கால்நடைத்துறையினர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பழுதடைந்து காணப்படும் கிராம நிர்வாக அலுவலகம்: புதுப்பித்து தரக் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details