ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு சாலை வரை மிகவும் குறுகலான சாலையாக உள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் பன்னீர்செல்வம் பார்க் வழியாக மணிக்கூண்டு கடந்துதான் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதனால் இந்த ரோடு முக்கிய போக்குவரத்து பகுதியாக விளங்கி வருகிறது.
மேலும் இப்பகுதியில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான ஜவுளி, பேன்சி மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகள் சாலையோரம் ஆக்கிரமித்து உள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
எனவே, மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் இந்தப் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகள்,பிளக்ஸ் போர்டு தட்டிகள், மரக்கட்டைகள் அகற்றினர்.
மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பகுதியில் வாகன நெரிசலின்றி ஒரு சில வாகனங்கள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பழையபடி இங்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இன்னும் சில நாள்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை சாலையோரமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:‘கரோனா தொற்றோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்’ - மாவட்ட ஆட்சியர் கதிரவன்!