ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் பிரசித்திப் பெற்ற பவானீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வந்தனர். பழமையான கோயில் என்பதால், 2018ஆம் ஆண்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோயிலின் தெற்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக கோயில் சுவர் கட்டப்படாத நிலையில், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று, இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி அண்மையில் தொடங்கியது.
மேலும், பொக்லைன் இயந்திரம் தெற்குபுறமாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கடந்த 10ஆம் தேதி கோயிலின் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்தது. அப்போது பக்தர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால், கோயிலின் நடை சாத்தப்பட்டது.