தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பு: மூவருக்கு சிகிச்சை தீவிரம்!

ஈரோடு:  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு

By

Published : Sep 18, 2019, 7:48 PM IST

ஒவ்வொரு வருடமும் பருவமழைத் தொடங்கும் காலத்தில் டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் இதுவரை நான்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருந்துறை பனிக்கம்பாளையத்தில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேற்கு வங்க மாநிலத் தொழிலாளி கோபால் மண்டல் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த ரோசன் உள்ளிட்ட மூன்று பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டும், அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கவும்: "டெங்கு பரவாமல் தடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகள்"- அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details