கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் இஸ்லாமியர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசாணையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சட்டீஷ்கர் ஆகிய மாநிலங்களில், 13 மாவட்டங்களில் குடியுரிமை கணக்கெடுப்பை நடத்ததும்படி அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிருஸ்தவர்கள், ஜைன மதத்தினர், பார்சி இனத்தினர் ஆகியோர் குறித்த கணக்குகளைச் சேகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை கணக்கெடுப்பை ரத்து செய்ய வலியுறுத்தி தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்! - erode tmmk
ஈரோடு: ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென, ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று (ஜூன் 2) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின்,ஈரோடு சங்கு நகர் பகுதியில், கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, ஈரோடு கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் 12 இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைப்பெற்றன. இதில் மாவட்ட துணைத் தலைவர் அமீர், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத்தலைவர் சித்திக் கூறுகையில், ’’கரோனா தொற்று பாதிக்கப்பட்டு நாளுக்கு உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசு தொடர்ந்து சி.ஏ.ஏ.என்.ஆர்.சி உள்ளிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஐந்து மாநிலங்களில், 13 மாவட்டங்களில் கணக்கெடுப்பை நடத்தி, அரசாணையை நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உடனடியாக இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்’’ என்றார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு