நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மகாத்மா காந்தியின் 150அவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் கலந்துகொண்டு காந்தியின் திருவுருவச் சிலைக்கு கதர் நூல்களாலான மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.