ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொதிக்குட்பட்ட நம்பியூர் நாச்சிபாளையத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குளம் புரமைக்கும பணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கிவைத்தார். பின்னர் அதே பகுதியில் மாற்றுக்கட்சிலிருந்து அதிமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்டோர்களுக்கு செங்கோட்டையன் சால்வை அணிவத்து கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பள்ளிகள் திறப்பது குறித்து நாளை (செப். 29) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அக்டோபர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பிக்கவில்லை.