தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோளக்காட்டில் கிடந்த இளைஞரின் சடலம்; காவல் துறை தீவிர விசாரணை - erode dead issue

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கெம்பாநாயக்கன்பாளையம் அருகே சோளக்காட்டில் தனியாக கிடந்த சடலத்தால் அப்பகுதியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோளக்காட்டில்

By

Published : Aug 23, 2019, 2:11 PM IST

சத்தியமங்கலம் அடுத்த கெம்பாநாயக்கன்பாளையம் பாரஸ்ட் ரோடு அருகே சோளக்காட்டில் இளைஞர் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் பங்களாபுதூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்தனர். கோளக்காட்டில் கிடந்த சடலம் யாரென அடையாளம் தெரியாத நிலையில், இறந்துகிடந்தவரின் அருகே கிடந்தசெல்ஃபோனில் பதிவான எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இறந்தவரின் பெரியசாலட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்றும், அவருக்கு ரேவதி என்ற மனைவியும் மகன் மகள் உள்ளார்கள் எனத் தெரியவந்தது. மேலும், பிரகாஷின் உடல், கால் பகுதியில் ரத்தம் கசிந்து தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுருந்தது காவல் துறையினரின் ஆய்வில் தெரியவந்தது.

பின்னர் சோளக்காட்டில் கிடந்த சடலத்தை கைப்பற்றி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details