தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்தேக மரணம்; அடக்கம் செய்த உடல் தோண்டப்பட்டு உடற்கூறாய்வு! - தொண்டுதல்

ஈரோடு: ஆசனூர் அருகே மர்மமான முறையில் இறந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

Death of suspect; Re-excavated body

By

Published : Jul 30, 2019, 5:23 AM IST

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(24). இவர், தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற அவரது மனைவி, மீண்டும் வராததால் தனியே இருந்து வந்த கணேசன், கடந்த ஒருமாதமாக தனது தாத்தா சேதுராமன் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு கோட்டை கிராமத்தில், கணேசன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, கணேசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சந்தேக மரணம்; மீண்டும் தோண்டப்பட்ட அடக்க உடல்

இந்நிலையில், பிரபு இரும்புக் கம்பியால் அடித்ததால் கணேசன் உயிரிழந்ததாக அவரது தாத்தா சேதுராமன், ஆசனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவக்குழுவினரை வரவழைத்து அடக்கம் செய்த உடலை தோண்டியெடுத்து உடற்கூறாய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details