ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்கள் திருடப்பட்டன. இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இறந்த யானையின் தந்தங்கள் கடம்பூர் வனப்பகுதியில் மீட்பு - தந்தம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இறந்த யானையிடம் இருந்து திருடப்பட்டு, கடம்பூர் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தந்தங்களை வனத் துறையினர் மீட்டனர்.
File pic
இதில் கடம்பூர் மலைப்பகுதி காந்திநகரைச் சேர்ந்த வீரன், வெள்ளையன், மூர்த்தி, பிரேம்குமார் ஆகியோர் தந்தத்தை திருடியது தெரியவந்தது. இதில் வீரன், வெள்ளையன் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கடம்பூர் வனப்பகுதியில் யானையின் தந்தத்தை மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்று வனத் துறையினர் தந்தத்தை மீட்டனர். பின் வீரன், வெள்ளையன் ஆகியோரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.