ஈரோடு: கொல்லம்பாளையம் தீபம் நகர் லோகனாதபுரம் பகுதியில் உள்ள காலியான இடத்தில் அழகிய நிலையில் பெண் சடலம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்பகுதியில் தொடர்ந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பொதுமக்கள் சென்று பார்த்த போது அழகிய நிலையில் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஈரோடு சூரம்பட்டி தெற்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தது சுமார் 45 வயது பெண் என்பது தெரிய வந்தது. உயிரிழந்த பெண்ணின் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருப்பால் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியாததால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் உயிரிழந்த பெண் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தாரா என்பத தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: தமிழ்நாடு-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு