பவானிசாகர் அணை முன்பு, பவானிசாகர் - பண்ணாரி சாலையில் பாலம் ஒன்று உள்ளது. சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு பவானிசாகர் அணை கட்டுமானப் பணிக்காக பொருட்களை கொண்டுச்செல்ல பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்ட இப்பாலம், பின்பு புஞ்சைபுளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் வழியாக பண்ணாரி செல்வதற்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பாலத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலத்தில் பெரிய ஓட்டை விழுந்ததால் வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, கொத்தமங்கலம், பட்டரமங்கலம், புதுபீர்கடவு, சுஜில்குட்டை, கல்லம்பாளையம், அல்லி மாயாறு, தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்கள் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டன.