ஈரோடு மாவட்ட மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு அம்சமாக பவானிசாகர் அணைப்பூங்கா திகழ்கிறது. திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இந்தப் பூங்காவை கண்டு களித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு நோய் தடுப்பு விதிகளைப் பின்பற்றி கடந்த 14ஆம் தேதி அணைப்பூங்கா திறக்க அனுமதியளித்தது.
அதன்படி முதலில் 500 பேர் வரை வந்த வண்ணம் இருந்த நிலையில், விடுமுறை நாள்களில் 1,500 பேர் வரை அணைப் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 93 அடியாக உள்ளதால் நீர்த்தேக்கப்பகுதி கடல் போல காட்சியளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இளைப்பாற நீர்த்தேக்கப் பகுதியில் அமர்ந்து அணை நீரை பார்த்து ரசிக்கின்றனர். சிலர் குடும்பம் குடும்பமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.