தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலத்தில் சாயக்கழிவுகளை கொட்டியவர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயும் -அமைச்சர் கருப்பணன்!

ஈரோடு: விவசாய நிலத்தில் சாயக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவத்தில் நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல்த் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு
அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு

By

Published : Jul 30, 2020, 7:15 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தொடங்கிவைத்தார். பின்னர் புன்னம் கிராமப்பகுதியில் 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்ச் சந்திப்பு

அப்போது அவர் கூறுகையில், “செம்பாண்டாம்வலசு பகுதியில் விவசாய நிலத்தில் சாயக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து நில உரிமையாளர் மீதும் சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகளை தமிழ்நாடு எல்லையில் கொட்டுவது தடுத்து நிறுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளவேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details