ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளியூர் வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் அவை இரை தேடிவரும் பாதையில் வெடிபொருட்களை வைக்கின்றனர்.
வெடிபொருளைக் கடித்த பசுவுக்கு நேர்ந்த கதி! - cow
ஈரோடு: வெடிபொருளைக் கடித்த பசுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அதன் உரிமையாளர், வன விலங்குகளை வேட்டையாட வெடிபொருட்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியில் வசித்துவரும் அமாவாசை என்ற விவசாயியின் பசு காளியூர் வனப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றுள்ளது. அப்போது வனவிலங்குகளுக்கு வைக்கப்படும் வெடிபொருளைக் கடித்துள்ளது. இதையடுத்து, சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பசுவின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய விவசாயி அமாவாசை, ‘காளியூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சமூக விரோதிகள் வெடிபொருட்களை வைக்கின்றனர். இதனால், வாயில்லா ஜீவன்கள் கொடூரமான முறையில் பாதிக்கப்படுகின்றன. தற்போது எனது வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றேன். இது போன்று வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வெடிபொருட்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேண்டுகோள்விடுத்தார்.