தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்த் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு - என் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு பொய்யானது என நீதிபதி கூறியுள்ளார்

கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடந்த அவதூறு வழக்கில் பிரேமலதா விஜய்காந்த் விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் அவதூறு வழக்கில் பிரேமலதா விடுதலை- கோர்ட் உத்தரவு
தேர்தல் அவதூறு வழக்கில் பிரேமலதா விடுதலை- கோர்ட் உத்தரவு

By

Published : Jul 18, 2022, 10:36 PM IST

ஈரோடு:கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தினேஷ்குமார் போட்டியிட்டார். இவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போதைய அதிமுக சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவதூறாக பேசியதாகவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் பேசிதாக அதிமுக கோபி நகர செயலாளராக இருந்த சையது புடான்சா என்பவர் கோபிசெட்டிபாளையம் வழக்கு தொடுத்தார்.

8 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு இன்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக கோபி நீதிமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த இன்று நீதிபதி விஜய் அழகிரி முன்பு ஆஜரானார். வழக்கை தொடர்ந்த சையது புடான்சா இறந்துவிட்டதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறி்தது பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு பொய்யானது என நீதிபதி கூறியுள்ளார். பொதுவாழ்க்கையில் இது போன்ற வழக்குகளை சந்திக்க வேண்டும். கேப்டன் மீது அனைத்து நீதிமன்றத்திலும் அவதூறு வழக்கு போட்டப்பட்டது.

மாணவி தற்கொலையா அல்லது கொலையை என கூட காவல் துறையினர் உறுதிபடுத்தவில்லை. விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. உடற்கூராய்வின் அறிக்கையில் ரத்த கறை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இருந்தால் கட்டாயமாக எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும். சிபிசிஐ-டிக்கு வழக்கை மாற்றுவதோடு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும். பெற்றோருக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக தான் உள்ளது. அதை சரி செய்ய வேண்டியது தமிழ்நாடுஅரசின் கடமை” என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details