ஈரோட்டைசேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார், தாயாரின் இரண்டாவது கணவர், புரோக்கர் மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்தவர் உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - இடைத்தரகரை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி.. - police custody enquiry for mediator illegally obtained an egg ovum from 16 year old girl in erode
16 வயது சிறுமியிடம் முறைகேடாக கருமுட்டை பெற்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டவரை ஒருநாள் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
![16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - இடைத்தரகரை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி.. 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - இடைத்தரகரை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15581569-thumbnail-3x2-e.jpg)
இதுதொடர்பாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இடைத்தரகராக செயல்பட்டவரின் வங்கிக்கணக்கில் பல்வேறு தேதிகளில் பணம் வரவு வைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட காவல்துறையினர், 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு ஈரோடு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று (ஜூன்).16 விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு - பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை!