ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 1850 பிடி ரக பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். இதனை கோவை, அன்னூர், கொங்கணாபுரம் வியாபாரிகள் பருத்தி ஏலம் எடுத்தனர்.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பனியன் கம்பெனிகளின் வேலை நேரம் குறைந்தது. இதனால் பருத்தி வாங்கும் தேவையும், நூல் உற்பத்தியும் குறைந்து காணப்படுகிறது.
மேலும் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூவாயிரத்து 850 ரூபாய் முதல் அதிகப்பட்சம் ரூபாய் நான்காயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விலை போனதால் பருத்தி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பருத்தி குவின்டால் ஐந்தாயிரத்து 150 ரூபாய் முதல் ஆறு 300 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது கடந்த ஆண்டை விட குவிண்டாலுக்கு இரண்டு ஆயிரம் வரை குறைந்ததாகவும், ஏலத்தில் ஆயிரத்து 850 பருத்தி மூட்டைகள் 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது எனவும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:வேலை இழந்த பெண்களுக்கு கைகொடுத்த நிறுவனம்!