தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டில் கார்ப்பரேட்டுகளும் காவிகளும் கூட்டணி அமைத்து பொருளாதாரத்தை சிதைக்கின்றனர் - கி.வீரமணி குற்றச்சாட்டு!

நாட்டில் கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்து பொருளாதாரத்தை சிதைப்பதாக கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் கார்ப்பரேட்டுகளும் காவிகளும் கூட்டணி அமைத்து பொருளாதாரத்தை சிதைக்கின்றன - கி.வீரமணி குற்றச்சாட்டு!
நாட்டில் கார்ப்பரேட்டுகளும் காவிகளும் கூட்டணி அமைத்து பொருளாதாரத்தை சிதைக்கின்றன - கி.வீரமணி குற்றச்சாட்டு!

By

Published : Aug 12, 2022, 9:40 AM IST

ஈரோடு: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2ஜி அலைக்கற்றை என்ற வினோத்ராய் ஆடிட்டர் ஜென்ரலை வைத்துக்கொண்டு, திட்டமிட்டு அப்போதைய யுபிஏ அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என தவறான கருத்தை பிரச்சாரம் செய்து, பலரையும் நம்ப வைத்து 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நஷ்டம் என கூறினர்.

திட்டமிட்டே திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ஆ.ராசா, கனிமொழி போன்றோரை சிறைச்சாலைக்கு அனுப்பினர். அந்த வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை என அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகாக மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கினை அவர்கள் நீதிமன்றத்தில் சந்திப்பார்கள்.

கி.வீரமணி பேட்டி

2ஜியை விட இன்றைக்கு 50 மடங்கு அதிகமான 4ஜி என்ற அலைக்கற்றை வந்துள்ளது. இது இன்றைக்கு பிஎஸ்என்எல்-க்கே கிடைக்கவில்லை. 5ஜி அலைக்கற்றை இனிமேல் தான் வரப் போகிறது. அது அம்பானிக்கு தான் கிடைக்கும் என சொல்லக்கூடிய அளவிற்கு கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்து இந்த நாட்டை பாழ்படுத்துகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கின்றனர். இவை நாடு முழுவதும் திராவிடர் கழகம் மூலம் பிரச்சாரம் செய்யப்படும். தமிழ்நாட்டில் வட மாநில பணம் அதிகளவில் வருகிறது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு, யார் யாருக்கு என்ன விலை என்பதை நினைத்து பாஜகவினர் கூலி பட்டாளம்போல ஆட்களை சேர்க்கின்றனர்.

குற்றவாளிகள், சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் ஆகியோர் தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காவி கட்சிக்கு செல்லும் நிலையில் உள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் எதிராக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பாஜவினர் வைத்து வருகின்றனர்.

டெல்லியால் அனுப்பப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர், போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். வட புறத்தில் இருக்கிற மாதிரி, இங்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி விட முடியாது. அதை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. காரணம் இது பெரியார் மண்.

கருப்புக்கு என்ன பலம் இருக்கிறது என்றால், கருப்பு காவியாகவில்லை. ஆனால், தற்போது காவி போட்டிருந்தவர்கள் எல்லாம் டெல்லியில் கருப்பு போடும் நிலைக்கு வந்து விட்டார்கள். கருப்பைக்கண்டு பிரதமரே யோசிக்க வேண்டிய கட்டத்திற்கும், பேச வேண்டிய கட்டத்திற்கும் வந்துள்ளார் என்றால், பெரியார் டெல்லியை தாண்டி பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

இதைத் தடுக்க அவர்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் தடுக்க முடியாது. காரணம், விஞ்ஞானத்தை எப்படி தடுக்க முடியாதோ, அதேபோல் பெரியாரின் தத்துவங்கள், சித்தாங்களையும், திராவிட மாடல், சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் ஒருபோதும் தடுக்க முடியாது.

அதற்குரிய எச்சரிக்கைதான் பீகாரில் ஏற்பட்ட அனுபவம். நடிகர் அல்லது வேறு நபர் ஆளுநரை சந்தித்தால் ஆட்சேபனை இல்லை. ஆனால், சந்தித்த நபர் பேசுகையில் அரசியல் பேசினோம் என்று கூறியுள்ளார். நமது வரிப்பணம் அவருக்கு சம்பளம். அவர் அரசியல் பேசுவதற்காக அல்ல.

தமிழ்நாடு ஆளுநர் அரசியல் பேசினார் என்றால், ராஜ்பவன் இப்போது ஆர்எஸ்எஸ்-ன் கிளையா என்பது தான் நியாயமான கேள்வி. அரசியல் செய்ய வேண்டும் என ஆளுநர்ர் நினைத்தால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அடுத்தபடியாக அல்லது அண்ணாமலையின் பதவிக்கு மேல் ஒரு பதவியை பாஜகவில் வாங்கி கொண்டு செய்யட்டும். நாமும் அவரை சந்திப்போம்” என பேசினார்.

இதையும் படிங்க:Video: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details