இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன்
அனுமதிக்கப்பட்ட 81 பேர்களில் 6 பேருக்கு கரோனோ பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மற்ற மூன்று பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். இதுமட்டுமின்றி 75 பேர்களின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்ப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஐந்து ஆயிரத்து 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.