தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக 6ஆம் கட்ட ஊரடங்கு ஜீலை 31ஆம் தேதி வரை சில கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகளுடன் தமிழ்நாடு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா! - ஈரோடு மாவட்ட செய்திகள்
ஈரோடு: இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 40 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைவரும் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் , சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம், பெரியார் நகர், ராஜாஜிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று உறுதியானவர்கள் வசித்து வந்த பகுதிகளில் தடுப்புகள் அமைத்தும், கிருமி நாசினி தெளித்தும் சுத்தப்படுத்தப்பட்டது.