தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதிக்கு கரோனா: போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை! - கைதிக்கு கரோனா

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிளை சிறைக் கைதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளை சிறை
கிளை சிறை

By

Published : Sep 2, 2020, 11:52 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது நபரை ஆகஸ்ட் 31ஆம் தேதி கஞ்சா விற்ற வழக்கில் பங்களாபுதூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு பின்னர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த நபருக்கு இன்று (செப்டம்பர் 2) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சத்தியமங்கலம் கிளை சிறையில் உள்ள அனைத்து கைதிகள், சிறைத்துறை காவலர்கள் ஆகியோருக்கு மருத்துவ குழுவினர் பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரி சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. இதன் காரணமாக சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details