தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானி காவல் ஆய்வாளருக்கு கரோனா - காவல் நிலையம் மூடல்

ஈரோடு: பவானி காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

பவானி காவல் நிலையம் மூடல்
பவானி காவல் நிலையம் மூடல்

By

Published : Aug 5, 2020, 2:19 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களுக்கும் தொற்றுநோய் உள்ளதா என்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் பவானி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் என்பவருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதே போல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வசித்து வரும் தனியார் தொலைக்காட்சி நிருபர் செந்தில்குமார் என்பவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பவானி நகரப்பகுதிகளில் தொற்று பரவுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். பவானி காவல் ஆய்வாளருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு காவல் நிலையத்தை வருவாய் துறையினர் பூட்டி வெளி ஆள்கள் யாரும் வராத அளவிற்கு காவல் நிலையத்தை பாதுகாத்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details