தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமாவாசை கூட்டம்: பண்ணாரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை - பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை

பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

Bannari Amman Temple
பண்ணாரி அம்மன் கோயில்

By

Published : Jul 9, 2021, 10:56 PM IST

ஈரோடு:பிரசித்தி பெற்றபண்ணாரி அம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இங்கு அமாவாசையை ஒட்டி இன்று (ஜூலை.9) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர்.

கரோனா தொற்று பரிசோதனை

கரோனாவை தடுப்பதற்காக, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 300 பேருக்கு கரோனை பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த சேகரிப்பு மூலம் தொற்று பரவல் குறித்து தகவல் தெரிந்து கொள்ள இயலும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படிப்படியாக குறையும் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details