தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணிக்காக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
காவலர்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய செங்கோட்டையன் - Erode police man
ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் 300 காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
இந்நிலையில் ஊரடங்கின்போது பணியாற்றி வரும் காவலர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நம்பியூர் ரோட்டரி உழவன் அமைப்பு சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் கோபிசெட்டிபாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நம்பியூர், சிறுவலூர், கவுந்தப்பாடி, பங்களாபுதூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு மாஸ்க், சானிடைசர், கையுறை, சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவையின் உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.