ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது என நகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில், கரோனா தொற்று பரவலை தடுக்க தேர்தலுக்கு முன்பாகவே நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் முகக்கவசம் அணியாமல் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து கட்டணம் வசூலிப்பதோடு, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் அபராதம்: சத்தியமங்கலம் நகராட்சி அலுவலர்கள் தகவல் - corona rule breakers
தேர்தல் நேரத்தில் நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராத கட்டணமாக இதுவரையில் ரூபாய் 2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா விதிமீறல்