ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளியில் நேற்று 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள சாலையோர மண்ணை அகற்றி சாலையைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் உலகையை மிரட்டி வரும் நிலையில், ஐந்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடி நிற்கக்கூடாது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.