ஈரோடு மாவட்டத்தின் சிறைச்சாலை கோபிச்செட்டிப்பாளையம் கச்சேரிமேடு பகுதியில் உள்ள நிலையில், இச்சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 81க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்ட கைதிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோபி மாவட்ட சிறையில் ஒரே நாளில் ஐந்து கைதிகளுக்கு கரோனா - erode Iatest News
ஈரோடு : கோபிச்செட்டிப்பாளையத்தில் இயங்கிவரும் ஈரோடு மாவட்ட சிறையில் ஐந்து கைதிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஐவருக்கும் பிணை பெற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
![கோபி மாவட்ட சிறையில் ஒரே நாளில் ஐந்து கைதிகளுக்கு கரோனா Corona infection in 5 inmates in one day at Kobe District Jail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:59:02:1600874942-tn-erd-02-sathy-sub-jail-vis-tn10009-23092020171300-2309f-1600861380-328.jpg)
Corona infection in 5 inmates in one day at Kobe District Jail
இதனைத் தொடர்ந்து இவர்கள் ஐவரும் நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத் துறையினர் ஆகியோரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் ஐந்து பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளதால் மற்ற கைதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிறையில் உள்ள 81 கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.