ஈரோடு மாவட்டம், மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பெற்று தமிழ்நாடு அளவில் முன்னிலை பெற்ற மாவட்டமாக விளங்கியது. 1600க்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 70 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதனிடையே மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பு நபர்கள் கண்டறியப்பட்டு 15 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு 33 ஆயிரத்து 330 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 800 நபர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இதனிடையே மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வித நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக புதிய நபர்களுக்கு நோய் பரவுவது வெகுவாக குறைந்தது.