தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலுக்கு முன் காலவரையற்ற போராட்டம்: தமிழ்நாடு அரசுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு - காலவரையற்ற போராட்டம்

ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு அரசுத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

கோரிக்கை மாநாடு
கோரிக்கை மாநாடு

By

Published : Oct 31, 2020, 6:19 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு அரசுத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கோரிக்கை மாநாட்டில் அனைவருக்கும் பயணிக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும் வேலை நிறுத்த காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

காலிப்பணிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊழியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கலந்துகொண்டு பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி, கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் அடுத்தாண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details