நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு அரசின் டான் டீ தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இங்கு ஏராளமான தேயிலை தொழிலாளர்கள் நிரந்தம், ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாகவே பல்வேறு காரணங்களால் அரசுக்கு சொந்தமான டான் டீ நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருகிறது.
உற்பத்தியை நிறுத்திய டான் டீ! தொழிலாளர்கள் வேலையிழப்பு - The Nilgiris
நீலகிரி: குன்னூரில் அரசுக்குச் சொந்தமான டான் டீ தொழிற்சாலையில், மின்சார செலவு அதிகரிப்பு என்பதால் திடீரென தேயிலை தூள் உற்பத்தியை அரசு நிறுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.
ஆனால், தற்போது மின்சார செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் தொழிற்சாலையை இயக்க முடியாமல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
இதனால் ஒரு வார காலமாக திடீரென்று தேயிலை உற்பத்தியை டான் டீ நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்தத் தொழிலை நம்பியுள்ள 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தம், நிரந்தர தொழிலாளர்கள், தோட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் மாற்று வேலைகளுக்கு செல்ல வெண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு முழு கவனம் செலுத்தி, தடையில்லாமல் நிறுவனத்தை இயக்க வேண்டுமென்பது தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.