தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடம்பூர் மலைப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: இருவர் கைது! - Rifle hunting

கடம்பூர் மலைப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

கடம்பூர் மலைப்பகுதியில் தொடரும் நாட்டுத்துப்பாக்கி வேட்டை
கடம்பூர் மலைப்பகுதியில் தொடரும் நாட்டுத்துப்பாக்கி வேட்டை

By

Published : Mar 9, 2021, 8:33 AM IST

சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் தங்களின் துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ஈரோட்டில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக உள்ள பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கடம்பூர் மலைப்பகுதியில் புளிக்காடு கண்ணுச்சாமி வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒற்றை குழல் துப்பாக்கி, கரி மருந்து, பால்ஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல மூலக்கடம்பூர் குருநாதன் வீட்டில் பதுக்கி இருந்த ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த கண்ணுச்சாமி மற்றும் குருநாதன் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்து கடம்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:ஆவடியில் கஞ்சா விற்பனை: இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details