தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை

மகாராஷ்டிராவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் பழுது ஏற்பட்டு நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

container lorry
container lorry

By

Published : Nov 11, 2020, 9:28 AM IST

ஈரோடு: திம்பம் மலைப்பகுதியில் கன்டெய்னர் லாரி பழுதானதால் தமிழ்நாடு- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து கோவை நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதடைந்து நகர முடியாமல் நின்றது. இதனால், திம்பம் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன.

திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுது

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் காவல் துறையினர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 6 மணியளவில் லாரி நகர்த்தப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதன்காரணமாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:உடனுக்குடன்: பிகார் சட்டப்பேரவை முடிவுகள் 2020

ABOUT THE AUTHOR

...view details