கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி பாசன வாய்க்காலில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பொதுத்தேர்வுக்கு முன்பாக 15 நாள்கள் பயிற்சி அளித்துவிட்டு தேர்வு தொடங்க வேண்டும் என்ற வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதற்கும், நீதியரசர் தீர்ப்புக்கும் வித்தியாசம் உள்ளது. மேலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது தவிர தீர்ப்பு கூறவில்லை.
அதுபோல 10ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் 210 நாள்கள் பள்ளி செயல்பட்டால் மட்டுமே முழுமையான பாடத்திட்டம் நடத்தப்படும். தற்போது பள்ளிகள் குறைந்த நாள்களில் செயல்படுவதால், அதற்கேற்ப பாடங்கள் குறைப்பது குறித்து மட்டுமே, அலுவலர்கள் 14 பேரும் கல்வியாளர்கள் 4 பேரும் என 18 பேர் கொண்ட உயர் மட்டக்குழு ஆய்வு செய்து வருகின்றது' என்றார்.