ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகத்தின் மத்தியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வனக்கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை சமவெளி பகுதியில் மறுகுடியமர்த்துவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் தெங்குமரஹாடா அரசுப் பள்ளியில் நேற்று (மார்ச் 06) நடைபெற்றது. இதில் கரூர், ரோடு, கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள், புலிகள் காப்பக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் நிகர் ரஞ்சன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி, சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் கிருபா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.