தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் வேலையின்றி தவித்த கட்டடத் தொழிலாளி தற்கொலை! - மன விரக்தியிலிருந்த கட்டடத் தொழிலாளி தற்கொலை

ஈரோடு: கரோனாவால் கட்டடப் பணிகள் கிடைக்காத மன விரக்தியில் இருந்த கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கட்டடத் தொழிலாளி தற்கொலை
கட்டடத் தொழிலாளி தற்கொலை

By

Published : Oct 6, 2020, 11:36 AM IST

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் அருகேயுள்ள அரசுப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதற்காக தூய்மைப் பணியாளர்கள் சென்றபோது, அங்கிருந்த மரத்தில் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், இது குறித்து பள்ளி நிர்வாகிகளுக்கும், கருங்கல்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், பாண்டியனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர் கமலா நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரியவந்தது. மேலும், இவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருந்ததும், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவருக்கு, தற்போது கரோனா கால ஊரடங்கினால் கடந்த சில மாதங்களாக கட்டடப் பணிகளும் கிடைக்கவில்லை. இதனால், மன விரக்தியிலிருந்து அவர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை... பிள்ளைகளுடன் பெண் தற்கொலை முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details