தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்! - Construction of the new bridge was started before the Bhawanisagar Dam

ஈரோடு: பவானிசாகர் அணை முன்பு பழுதடைந்த பாலத்திற்குப் பதிலாக புதிய பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

bhawanisagar dam
bhawanisagar dam

By

Published : Jan 23, 2020, 9:50 AM IST

பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே பழமை வாய்ந்த பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் அணை கட்டுமான பணிகள் நடைபெற்றபோது, பொருட்கள் கொண்டு செல்வதற்காக பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்டது. அணை கட்டுமான பணி முடிந்தபின்பு, இப்பாலம் வழியாக புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி சாலையில் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துகள் சென்று வந்துள்ளன.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலத்தின் நடுவே இரண்டு இடங்களில் பெரிய ஓட்டை விழுந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை, புதுபீர்கடவு, பட்டரமங்கலம், சுஜில்குட்டை, நந்திபுரம், கல்லம்பாளையம், அல்லிமாயாறு, தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

புதிய பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்

சேதமடைந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக 8 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததையடுத்து, புதிய பாலம் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்

இதையும் படிங்க: பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்- பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார்

ABOUT THE AUTHOR

...view details