தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு: கடந்த முப்பது ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை வேறு வழியில் மாற்றி இயக்கப்படுவற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Congress protest
Congress protest

By

Published : Dec 12, 2019, 3:04 PM IST

இந்திய அளவில் ரயில்வே துறையில் அதிக வருவாய் ஈட்டித் தரும் மாவட்டமாக ஈரோடு உள்ளது. ஈரோடு ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈரோடு ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டுவந்த நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஈரோடு வழியாக செல்லாமல் நாமக்கல் மாவட்டம் வழியாக செல்லும் என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

அதேபோல் மயிலாடுதுறை - மைசூர் ரயில் உள்ளிட்ட ரயில்களும் நாமக்கல் மாவட்டம் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாவட்ட சிறுபான்மை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அப்போது அதிக வருவாயை ஈட்டித் தரும் ரயில்களையும், மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் ரயில்களையும் ரத்து செய்யப்படுவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் ஈரோடு வழியாக இயக்காவிட்டால் அடுத்தக்கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details