தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில்  காங்கிரஸ் கமிட்டியின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது - Erode news

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் கட்சியின் மாநில துணைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி ஆய்வுக் கூட்டம்
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி ஆய்வுக் கூட்டம்

By

Published : Aug 15, 2021, 1:11 AM IST

ஈரோடு: தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.14) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் மாநில துணை தலைவர் இதயதுல்லா, மாநில செயலாளர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இதயதுல்லா, "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக பூத் கமிட்டி, மாவட்ட கமிட்டி பட்டியல் தயாரிக்க மாநில கமிட்டி கோரி இருந்தது. அதற்கான பணிகளை தொடங்க உள்ளோம்.

மறைந்த காங்கிரஸ் பொறுப்பாளர்கள், வட்டார, கிளை பொறுப்பாளர்கள் இல்லங்களுக்கு சென்று அவர்களை கவுரவித்து கட்சியில் பணியாற்ற அழைப்பு விடுத்தோம். சுதந்திர தினவிழா நடைபயணத்தை, மூலப்பாளையத்தில் தொடங்க உள்ளோம்.

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி ஆய்வுக் கூட்டம்

திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவு செய்துள்ளது. நேற்று (ஆக.13) பட்ஜெட்டில் பெட்ரோல் வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவை மக்களைச் சென்றடையும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிவிட்டர் பக்கத்தை முடக்குவதன் மூலம் கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிட முடியாது" எனத் கூறினார்.

இதையும் படிங்க: 15 காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கம் - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details