தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி காங்கிரஸ்" - ஹெச் ராஜா - தெலுங்கானா

தெலங்கானாவில் அடுத்தாண்டு டிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சி ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி; காங்கிரஸ் ஒரு செத்துப்போன கட்சி - ஹெச் ராஜா
காங்கிரஸ் ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி; காங்கிரஸ் ஒரு செத்துப்போன கட்சி - ஹெச் ராஜா

By

Published : Sep 5, 2022, 11:19 AM IST

ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "”2023ஆம் ஆண்டு தெலங்கானாவில் டிஆர்எஸ். கட்சி ஆட்சியில் இருக்காது. அங்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் வீதம் நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட உள்ளோம்.

ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு நியாயமானது. 38 ரூபாய்க்கு அரிசியை விலை கொடுத்து வாங்கி 2 ரூபாய்க்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கிறது. அண்ணாமலையை பார்த்து உதை கொடுப்போம் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது கண்டிக்கத்தக்கது. ஒருமுறை கலைஞர் கருணாநிதியை பற்றி பேசி அவரே மன்னிப்பு கேட்டதும் நாடு அறியும்.

காங்கிரஸ் செத்துப்போன கட்சி. ஒரு தலைவரை கூட கண்டுபிடிக்க முடியாத கட்சி. நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. சென்னை-சேலம் எட்டு வழி சாலை வேண்டாம் என்று சொன்னவர்கள் இன்று வேண்டுமென சொல்கிறார்கள். பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் யாரையும் பாதிக்காமல் செயல்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க:அன்பும் அறிவும் அள்ளிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான நாள்

ABOUT THE AUTHOR

...view details